Enable Javscript for better performance
நாடாளுமன்றம் முன் தர்னா: புதுவை விவசாயிகள் தில்லி பயணம்- Dinamani

சுடச்சுட

    

    நாடாளுமன்றம் முன் தர்னா: புதுவை விவசாயிகள் தில்லி பயணம்

    By DIN  |   Published on : 30th October 2017 09:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் வரும் நவம்பர் 1-ஆம் தேதி நாடாளுமன்றம் முன் நடைபெறும் விவசாயிகள் தர்னா போராட்டத்தில் பங்கேற்க புதுவை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்றனர்.
    எம்எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டும், நில ஆர்ஜித சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், கூட்டுறவு, தேசிய, தனியார் வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டும், விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க ரூ.ஒரு லட்சம் கோடி விவசாய நிதியை ஏற்படுத்த வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் முன் நவம்பர் 1-ஆம் தேதி தர்னா போராட்டம் நடத்தப்படுகிறது.
    இதில், புதுவை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் எம்.மாசிலாமணி, து.கீதநாதன், து.ராஜா, வெலி.கலியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
    அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆர்.விஸ்வநாதன், அமு.சலீம், விவசாயிகள் சங்கம் டிபி.ரவி, பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பெருமாள் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai