Enable Javscript for better performance
மார்க்சிய நூல்களை தற்போதைய தலைமுறையினரை படிக்க வைக்கவேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மார்க்சிய நூல்களை தற்போதைய தலைமுறையினரை படிக்க வைக்கவேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 30th October 2017 09:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மார்க்சிய நூல்களை தற்போதைய தலைமுறையினரை படிக்க வைப்பதே  அனைவரது கடமையாக இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
     மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேசக்குழு சார்பில், காரல் மார்க்ஸின் 200-ஆம் ஆண்டு விழா மற்றும் ரஷிய புரட்சியின் நுற்றாண்டு விழா புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
    பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை வகித்தார்.
    "காலத்தை வென்ற காரல் மார்க்ஸ்' என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்
    கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
    முதலாளித்துவம் சிறிய நாடுகளை அடிமைப்படுத்தி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் நிலையில், காரல்மார்க்ஸின் மூலதனம் நூல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இன்றைக்கு திகழ்கிறது.  உலகத்தில் உள்ள பெரும் பகுதி மக்கள் மார்க்ஸின் பொருளாதாரக்
    கொள்கையை அங்கீகரித்துள்ளனர்.
    அவரது நூல்களை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று லண்டன் பி.பி.சி நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.  போப்ஆண்டவரே மார்க்ஸின் பொருளாதாரத்தை ஏற்றுக் கொண்டு கருத்து தெரிவித்துள்ளார். எனவே தான் சோவியத் தோல்வியை மார்க்ஸின் தோல்வியாக எடுத்துக் கொள்ள முடியாது. 200 ஆண்டுகள் ஆனாலும் காரல் மார்க்ஸை உலக முதலாளித்துவத்தால் மறைக்க முடியவில்லை. மார்க்ஸின் கூற்றுபடி இறுதியில் முதலாளித்துவம் தோல்வியுறும். எனவே தான் தற்போதைய தலைமுறையினரிடம்  காரல்மார்க்ஸின் நூல்களை படிக்க வைப்பது காலத்தின் கட்டாயமாகும் என்றார்.
    மதுக்கூர் இராமலிங்கம்
    "ஆஹா எழுந்தது யுகப்புரட்சி' என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட்  தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் பேசுகையில்,
    இந்தியாவை இன்றைக்கு ஆள்பவர்கள் பன்முக கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்றபடி செயல்படுகின்றனர். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் நாட்டில் ஏற்பட்ட யுகப்புரட்சி என்பது பன்முக கலாசாரம் என்பதை உறுதி செய்யப்பட்டது.
    எண்ணற்ற மொழிகளில் பேசிய சோவியத் மக்கள் அவரவர் மொழிகளே தாய்மொழிகள் என்று தேசிய மொழியாக அங்கீகரித்தது என்றார்.
    தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள்,  பிரதேசக்குழு உறுப்பினர் தா.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சுமதி, வின்சென்ட், மற்றும் மதிவாணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai