Enable Javscript for better performance
மூத்த குடிமக்கள் சங்க விளையாட்டுப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    பாண்டிச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வுச் சங்கம் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை சாரதாம்பாள் நகரில் உள்ள புனித பேட்ரிக் பள்ளியில் நடைபெற்றன.
    மூத்த குடிமக்களுக்கு பலவித நலத்திட்ட உதவிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுவது வழக்கம்.
    அதன்படி, நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை சங்கத் தலைவர் எஸ்.வி. ஐயர் தொடக்கி வைத்தார். இதில் கோலப் போட்டி, சமையல் போட்டி, இசை நாற்காலி, இசைப் போட்டி ஆகியவை பெண்களுக்கு நடத்தப்பட்டன. ஆண்களுக்கு பந்து கைமாறுதல், இசை நாற்காலி,  கேரம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர், வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை உப தலைவர் உதயபாஸ்கரன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai