சுடச்சுட

    

    புதுச்சேரியில் மெர்சல் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கை முற்றுகையிட முயன்ற ஹிந்து அமைப்பினர் 22 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள மெர்சல் திரைப்படத்தில் ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பற்றி அவதூறான வார்த்தை வருவதாக குற்றம் சாட்டி, அதனை உடனே நீக்கக் கோரி ஞாயிற்றுக்கிழமை காமராஜர் சாலையில் அந்தப் படம் ஓடிக்கொண்டிருக்கும்  திரையரங்கை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர்.
    அதன்படி, ஹிந்து அமைப்பைச் சேர்ந்த மஞ்சினி உள்ளிட்டோர் திரையரங்கம் அருகே பேரணியாகச் சென்ற போது போலீஸார் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
    அப்போது போலீஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 9 பெண்கள் உள்பட
    22 பேரை போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai