சுடச்சுட

  

  அரியாங்குப்பம், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துகளில் மழை பாதிப்பை தடுக்கும் வகையில், அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.
  அரியாங்குப்பம் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் தவளக்குப்பத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
  மாவட்டப் பொறுப்பாளர் துரை.கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் சக்திபாலன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், துணைத் தலைவர் ஏம்பலம் ஆர்.செல்வம், பொதுச் செயலாளர் தங்க.விக்ரமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
  மணவெளி தொகுதித் தலைவர் லட்சுமிகாந்தன் வரவேற்றார். மாவட்ட பொதுச் செயலர் கணேஷ் தீர்மானங்களை வாசித்தார்.
  தீர்மானங்கள்:மழைக் காலத்தை முன்னிட்டு பாகூரில் தாற்காலிக பேரிடர் மேலாண்மை நிலையம் அமைக்க வேண்டும், அரியாங்குப்பம், பாகூர் கொம்யூனில் அனைத்து வடிகால்வாய்களையும் தூர்வார வேண்டும்.
  அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், ஏம்பலம், பாகூர், கரையாம்புத்தூர் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை டெங்கு பாதிப்பை எதிர் கொள்ளும் வகையில் 24 மணி நேரம் இயக்க வேண்டும்.
  அரியாங்குப்பத்தில் 30 படுக்கை வசதி கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையை ஏற்படுத்திய மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
  கொசு உற்பத்தையை தடுக்கும் வகையில் அரியாங்குப்பம், பாகூர், நெட்டப்பாக்கம் கொம்யூன்களில் காலி மனைகளில் தேங்கி நிற்கும் மழைநீரை போர்க்கால அடிப்படையில் அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன.
  மாநில இளைஞரணிச் செயலர் சிலம்பரசன், நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, திருவேங்கடம், கலைவாணன், சுகுமாரன், மகளிரணி ரேவதி, விமலாதேவி, சுந்தரி உள்பட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai