சுடச்சுட

  

  ஆளுநர் செயலக பணிகள் குறித்து தவறான தகவல்களை பரப்பக் கூடாது: கிரண் பேடி

  By DIN  |   Published on : 31st October 2017 01:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆளுநர் செயலகத்தின் பணிகள் தொடர்பாக மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கேட்டுக்கொண்டார்.
  முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் தனது தொகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான திட்டத்தை கிரண் பேடி தடுத்து நிறுத்திவிட்டதாக குற்றம் சாட்டி, அவருக்கு எதிராக தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார்.
  இதுதொடர்பாக ஆளுநர் கிரண் பேடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
  முத்தியால்பேட்டை தொகுதியில் மேற்கொள்ளப்பட இருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் குறித்து தொடர்புடைய அதிகாரிகளுடன் ஆய்வு செய்யப்பட்டது. உண்மைகள் மறைக்கப்பட்டு மீண்டும் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளது. ஆளுநர் அலுவலகத்தின் செயல்பாடு குறித்து தவறான தகவல்களை மக்களிடம் பரப்பக்கூடாது.
  புதுச்சேரி மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான கடைசி இடமாக ஆளுநர் மாளிகை உள்ளது. ஆளுநர் அலுவலகத்தின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அலுவலக அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். தவறான தகவல்களை எதிர்கொள்வதன் மூலம் இதனை செய்து வருகிறேன்.
  ஆளுநர் செயலக செயல்பாடு பற்றி பொது அறிவிப்புகள் செய்வதற்கு முன் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உண்மைகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என மக்கள் பிரதிநிதிகளை கேட்டுக் கொள்கிறேன்.
  அவர்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் ஆளுநர் அலுவலகம் மகிழ்ச்சியாக அளிக்கும். வாரம்தோறும் திங்கள் முதல் புதன்கிழமை வரை மாலை 4 மணி முதல் 7 மணிவரை முன் அனுமதி ஏதும் பெறாமலேயே என்னையோ, எனது செயலரையோ சந்திக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார் கிரண் பேடி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai