Enable Javscript for better performance
ஆளுநர் மாளிகையில் எந்தக் கோப்பு தேங்கியுள்ளது: கிரண்பேடி கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    ஆளுநர் மாளிகையில் எந்தக் கோப்பு தேங்கியுள்ளது: கிரண்பேடி கேள்வி

    By DIN  |   Published on : 31st October 2017 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை ஆளுநர் மாளிகையில் எந்தக் கோப்பு தேங்கியுள்ளது என ஆதாரத்துடன் கூற முடியுமா என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கேள்வி எழுப்பினார்.
    புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
    ஆளுநர் மாளிகையில் இதுவரை எந்தக் கோப்புகளும் நிறுத்தி வைக்கப்படவில்லை. ஆனால், தொடர்ச்சியாக சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையில் கோப்புகள் தேங்கியுள்ளதாக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
    அப்படி குற்றச்சாட்டுகள் கூறுபவர்கள் கோப்புகள் தேங்கியுள்ளது குறித்து ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? முத்தியால்பேட்டை பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்துக்கான கோப்புகள் ஆளுநர் மாளிகையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார். ஆனால், ஆளுநர் மாளிகையில் அந்தக் கோப்பு இல்லை. பொதுப்பணித் துறையில்தான் உள்ளது என்று போராட்டத்தில் ஈடுபட்ட அவருக்கே தெரியும். நிர்வாக ரீதியாக உள்ள தடைகளுக்கு என்னை குற்றம் சாட்டுவது தவறு.
    நடிகை அமலாபால் புதுச்சேரியில் சொகுசு கார் வாங்கி வரிஏய்ப்பு செய்துள்ளதாக ஊடகத்தை பார்த்து தெரிந்து கொண்டேன்.
    இதுதொடர்பாக முதல்கட்ட விசாரணை நடத்த முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சனுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
    அதேபோல, போக்குவரத்துத் துறை செயலர் மற்றும் ஆணையரிடம் 15 நாள்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கக் கூறியுள்ளேன் என்றார் கிரண் பேடி.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai