சுடச்சுட

  

  காரைக்கால் மாவட்ட அளவிலான 3 நாள் கபடி போட்டி நிறைவில் சாம்பியன்பட்டத்தை மண்டபத்தூர் அணி பெற்றது.
  புதுச்சேரி மாநில நியூ கபடி சங்க அனுமதியுடன், காரைக்கால் மாவட்ட கபடி சங்கத்தின் முதலாம் ஆண்டு மாவட்ட அளவில் சாம்பியன்ஷிப் கபடி போட்டி காரைக்காலில் அக். 28-ஆம் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்கள் நடைபெற்றன.
  பகல், இரவாக நடைபெற்ற இப் போட்டியில், மாவட்டத்திலிருந்து 17 அணியினர் பங்கேற்று விளையாடினர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் மண்டபத்தூர் என்எஸ்பி. அணியும், காரைக்கால் மேடு லிட்டில் பிங்க் அணியும் மோதின.
  இதில் மண்டபத்தூர் அணியினர் அதிக புள்ளிகளைப் பெற்று சாம்பியன்ஷிப் விருதை பெற்றது. 2-ஆவது பரிசை காரைக்கால் மேடு அணியும்,
  3-ஆவது பரிசை பட்டினச்சேரி மற்றும் நிரவி அணியும் பெற்றன.
  போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சட்டப் பேரவை உறுப்பினர்கள் கே.ஏ.யு. அசனா, கீதாஆனந்தன் ஆகியோர் விருது வழங்கி பாராட்டினர்.
  நிகழ்ச்சியில் அர்ஜூனா விருது பெற்ற முன்னாள் இந்திய கபடி அணி கேப்டனும், தமிழக நியூ கபடி சங்கத் தலைவருமான எஸ். ராஜரத்தினம், புதுவை மாநில நியூ கபடி சங்க பொதுச் செயலர் டி. வின்சென்ட்ராஜ், காரைக்கால் மாவட்டத் தலைவர் ஏ.எம். நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai