Enable Javscript for better performance
சென்டாக்: ஆயுர்வேத பாடப் பிரிவில் 3 இடங்கள் நிரம்பின- Dinamani

சுடச்சுட

    

    சென்டாக் கலந்தாய்வில் ஆயுர்வேத பாடப் பிரிவுக்கான 3 இடங்கள் நிரம்பிவிட்டன என ஒருங்கிணைப்பாளர் ருத்ரகெளடு தெரிவித்தார்.
    மாஹேயில் ராஜீவ் காந்தி அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு பிஏஎம்எஸ் பாடப் பிரிவில் 3 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன.
    இதற்காக சென்டாக் சிறப்புக் கலந்தாய்வு, பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
    மொத்தம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டத்தில் 65 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். அவர்களில் 3 பேருக்கு தகுதி அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.
    கலந்தாய்வு நிறைவில் எந்த இடமும் காலியாக இல்லை என்றார் ருத்ரகௌடு.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai