சுடச்சுட

    

    பலத்த மழை அறிவிப்பு எதிரொலி: புதுவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

    By DIN  |   Published on : 31st October 2017 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பலத்த மழை அறிவிப்பு எதிரொலியாக, புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், 5 நாள்கள் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்தது. புதுச்சேரியில் கடந்த 2 நாள்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதனால் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கல்வித் துறை இயக்குநர் குமார் வெளியிட்டார்.
    மேலும், மழை காரணமாக செவ்வாய்க்கிழமை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து புதன்கிழமை புதுச்சேரி சுதந்திர தினம் (நவ.1), 2-ஆம் தேதி கல்லறை திருநாள் உள்ளூர் விடுமுறை என தொடர்ந்து மூன்று நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai