சுடச்சுட

  

  பலத்த மழை எதிரொலி: புதுவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

  By DIN  |   Published on : 31st October 2017 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பலத்த மழை அறிவிப்பு எதிரொலியாக, புதுச்சேரியில் அனைத்துப் பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், 5 நாள்கள் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்தது.
  புதுச்சேரியில் கடந்த 2 நாள்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதனால் அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
  இதற்கான அறிவிப்பை கல்வித் துறை இயக்குநர் குமார் வெளியிட்டார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai