சுடச்சுட

  

  புதுவை பல்கலை. துணைவேந்தர் பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டம்

  By DIN  |   Published on : 31st October 2017 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பொ) அனிஷா பஷீர் கான் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்கள் திங்கள்கிழமை அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தராக பொறுப்பு வகித்து வரும் அனிஷா பஷீர் கான் மீது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
  இந்த நிலையில், காலாப்பட்டு காவல்நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தடையாணையும் பெறப்பட்டது.
  இந்த நிலையில், துணைவேந்தர் அலுவலகத்தை மாணவர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகத்திலிருந்து துணைவேந்தர் வெளியேற இயலவில்லை. அத்துடன் துணைவேந்தர் பதவி விலகவும் கோஷங்களை எழுப்பினர். மாலை வரை போராட்டம் தொடர்ந்தது.
  இதுதொடர்பாக போராட்டத்துக்கு தலைமை வகித்த மாணவர் பேரவைத் தலைவர் நர்மதா கூறியதாவது:
  துணைவேந்தர் பொறுப்பு வகிக்கும் அனிஷா பஷீர் கான் மோசடி செய்ததாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்கள் கிடைத்துள்ளன. மாணவர் நிதியான ரூ.1.40 கோடியில் இந்த முறைகேடு நடந்துள்ளது. இந்த நிதியை வழக்குச் செலவுக்காக பயன்படுத்தியுள்ளது தகவலில் வெளியானது.
  இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவான நிலையில், நீதிமன்ற தடையாணை பெற்றுள்ளனர். அவர் பதவியிலிருந்து விலக வேண்டும். இதுதொடர்பாக எங்களிடம் பேசுவதாக தெரிவித்துள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai