Enable Javscript for better performance
மருத்துவமனையில் சார்-ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    துணை நிலை ஆளுநர் உத்தரவின்படி சார் ஆட்சியர் ஏ. விக்ராந்த் ராஜா காரைக்கால் மருத்துவமனையில் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
    காரைக்காலில் கடந்த வாரம் 5 நாள்கள் முகாமிட்டிருந்த துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையின் மேம்பாடு மற்றும் சிகிச்சை முறை குறித்து 3 நாள் ஜிப்மர், நலவழித்துறை அலுவலர்களுடன் ஆலோனை மேற்கொண்டார். முகாம் நிறைவு நாளில் செய்தியாளர்கள் சந்திப்பில், நோயாளிகளைப் போல் மருத்துவமனை நிர்வாகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறி, மருத்துவமனையை நாள்தோறும் சார்-ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்கவேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
    அதன்படி சார் ஆட்சியர் ஏ. விக்ராந்த் ராஜா அரசு பொது மருத்துவமனைக்கு திங்கள்கிழமை சென்று அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட மருத்துவப் பிரிவுகளில் நோயாளிகள் குறித்த பதிவுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்த பிறகு, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சைப் பெறும் பிரிவுக்குச் சென்று பார்வையிட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai