சுடச்சுட

  

  மழைக்கால நோய்த் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

  By DIN  |   Published on : 31st October 2017 01:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பருவமழைக் காலத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்த் தாக்குதலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நலவழித் துறை அலுவலர் கேட்டுக்கொண்டார்.
  காரைக்காலில் கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் வரை சுமார் 300 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்நிலையில் நலவழித்துறை துணை இயக்குநர் பி. நாராயணசாமி தலைமையில் நோய்த் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார உதவியாளர்கள், கிராமப்புற செவிலியர்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். மாவட்ட நிர்வாகம் பல்வேறு அமைப்புகள் மூலமாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இந்நிலையில், டெங்கு காய்ச்சல் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  இதுகுறித்து நலவழித்துறை துணை இயக்குநர் பி. நாராயணசாமி திங்கள்கிழமை கூறியது :
  காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தீவிர டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மூலம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது. பருவமழை தொடங்கியுள்ள இக்காலத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய் குடிநீர் சுகாதாரமற்றதாக இருக்கும்பட்சத்தில் ஏற்படக்கூடும். எனவே, குடிநீரை காய்ச்சி வடிகட்டிய பிறகு குடிப்பதே சிறந்தது. சிறுவர்கள், முதியோர் மழையில் நனையாமல் இருப்பது மிக நல்லது. இவ்வாறு ஓரளவு கடைப்பிடிக்கப்பட்டால் பருவ மழைக்கால நோய்கள் ஏற்படாமல் காத்துக்கொள்ள முடியும் என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai