காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, காரைக்காலில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி தலைமையில் அந்தக் கட்சியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
காவிரி நீர் கிடைக்காததால் காவிரியின் கடை மடைப் பகுதியான காரைக்காலில் விவசாயம் நான்கில் ஒரு பங்காகச் சுருங்கிவிட்டது. மேலும், நிலத்தடி நீரின் தரமும் குறைந்துவிட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதைக் கண்டித்து, தமிழகம், புதுவையில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
ஆனாலும், புதுவையில் எதிர்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் இந்த விஷயத்தில் மெüனமாக இருந்து வந்தது. இது குறித்து விமர்சனம் எழுந்தது.
இதையடுத்து, கட்சியின் தலைவர் ரங்கசாமி கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளுடன் கடந்த திங்கள்கிழமைஆலோசனை நடத்தினார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கலாம், அதை காரைக்காலில் மேற்கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாலன் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டார்.
அதில், காவிரி நதிநீர் காரைக்கால் பகுதியில் மீண்டும் கரைபுரண்டு ஓட, உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், மாநில அரசைக் கண்டித்தும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயிலடியில் இன்று காலை 9 முதல் மாலை 6 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறும்.
போராட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள், தொண்டர்கள் மற்றும் மகளிர் குழுக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

போளூரில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்

சட்டவிரோதமாக மது விற்றவா் கைது

பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

