ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

காவிரி மேலாண்மை வாரியம் கோரி காரைக்காலில் ரங்கசாமி இன்று உண்ணாவிரதம் 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, காரைக்காலில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி தலைமையில் அந்தக் கட்சியினர் இன்று  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 8:52 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, காரைக்காலில் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி தலைமையில் அந்தக் கட்சியினர் இன்று  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளனர்.
 காவிரி நீர் கிடைக்காததால் காவிரியின் கடை மடைப் பகுதியான காரைக்காலில் விவசாயம் நான்கில் ஒரு பங்காகச் சுருங்கிவிட்டது. மேலும், நிலத்தடி நீரின் தரமும் குறைந்துவிட்டது.
 இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதைக் கண்டித்து, தமிழகம், புதுவையில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.
 ஆனாலும், புதுவையில் எதிர்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் இந்த விஷயத்தில் மெüனமாக இருந்து வந்தது. இது குறித்து விமர்சனம் எழுந்தது.
 இதையடுத்து, கட்சியின் தலைவர் ரங்கசாமி கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளுடன் கடந்த திங்கள்கிழமைஆலோசனை நடத்தினார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கலாம், அதை காரைக்காலில் மேற்கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.
 இதைத் தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பாலன் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டார்.
 அதில், காவிரி நதிநீர் காரைக்கால் பகுதியில் மீண்டும் கரைபுரண்டு ஓட, உச்ச நீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியும், மாநில அரசைக் கண்டித்தும், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
 காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயிலடியில் இன்று  காலை 9 முதல் மாலை 6 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெறும்.
 போராட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள், தொண்டர்கள் மற்றும் மகளிர் குழுக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர் என்றார் அவர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.