புதுச்சேரியில் பிரபல ரெளடி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. பிரபல ரெளடியான இவர் மீது கொலை, கட்டபஞ்சாயத்து, மிரட்டல் உள்பட பல வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் வைத்திக்குப்பம் பஞ்சாயத்து நிர்வாகி மாறன் கொலை வழக்கில் கைதான மூர்த்தியை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் மூர்த்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு முத்தியால்பேட்டை போலீஸார் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் விஜய் உத்தரவின் பேரில் ரெளடி மூர்த்தியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.