தொண்டமாநத்தம், கணுவாய்பேட்டை ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
செவ்வாய்க்கிழமை (ஆக.7) காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரை பிள்ளையார்குப்பம், ராமநாதபுரம், தொண்டமாநத்தம் ஒரு பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
"வி.தட்டாஞ்சாவடி, திருவேணி நகர், ஐஓசி ரோடு, தில்லை நகர், அம்பேத்கர் நகர், வி.மணவெளி, உத்திரவாகினிபேட்டை, ஒதியம்பட்டு, எஸ்எஸ் நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும்.
இத்தகவலை மின்துறை செயற்பொறியாளர் (கிராமம் - வடக்கு) அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.