மின் கட்டணத்தை கடைசி தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று புதுச்சேரி மின்துறை நகர இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் கனியமுதன் வேண்டுகோள் விடுத்தார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி மின்துறை நகர இயக்குதல் மற்றும் பராமரித்தல் கோட்டம், நகர்ப்புற மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உள்பட்ட (கடற்கரை சாலை, வம்பாகீரப்பாளையம், துப்புராயப்பேட்டை, நெல்லித்தோப்பு, எல்லப்பிள்ளைச்சாவடி வரை மற்றும் முருங்கப்பாக்கம் முதல் முத்தியால்பேட்டை வரை), சாரம், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், பாலாஜி நகர், சுதந்திர பொன்விழா நகர், திருமுடி சேதுராமன் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத் தொகையை கடைசி தேதிக்குள் செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்த்து மின்துறையுடன் ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.