புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை கத்தோலிக்க தேவாலயத்தின் ஆண்டுப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் 167-ஆம் ஆண்டுப் பெருவிழா வரும் 15-ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக ஆலய கொடியேற்றும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. காலை 5 மணிக்கு அருட்தந்தை குழந்தைசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து ஆலயக்கொடி ஊர்வலம் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பின்னர் உயர் மறை மாவட்ட முதன்மை குரு அருளானந்தம் தலைமையில் கொடி ஏற்றப்பட்டது.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். வரும் ஆக.15-ஆம் தேதி காலை அருட்தந்தையர்கள் அலெக்சாண்டர், மெல்கி செதேக் ஆகியோர் தலைமையில் திருப்பலியும் பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் தேர் பவனியும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அருட் தந்தையர்கள் குழந்தைசாமி, அலெக்சாண்டர் தலைமையில் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.