நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் கோரி தொடர் போராட்டம்: ஏஐடியுசி அறிவிப்பு

அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, தொடர் போராட்டம் நடத்தப் போவதாக ஏஐடியுசி தொழில்சங்கம் அறிவித்தது.

Updated On :8 அக்டோபர் 2018, 9:14 am IST

அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, தொடர் போராட்டம் நடத்தப் போவதாக ஏஐடியுசி தொழில்சங்கம் அறிவித்தது.
 புதுவை மாநில ஏஐடியுசி குழு சார்பில் அரசுத் துறை, அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி கருத்தரங்கம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 கருத்தரங்குக்கு மாநில ஏஐடியுசி செயல் தலைவர் வி.எஸ்.அபிஷேகம் தலைமை வகித்தார். பொதுச் செயலர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி. மு.ராமதாஸ், புதுவை வடக்கு மாநில திமுக அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலர் இரா.விசுவநாதன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
 கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:புதுவை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்வேறு வாரியம், முகமை, கழகம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 6 மாதங்கள் முதல் 50 மாதங்கள் வரையான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 43 வகையான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதற்கு அங்கு நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகளே காரணம். 9 நிறுவனங்களின் மறுசீரமைப்புக்கென போடப்பட்ட ஒரு நபர் குழு வெறும் கண் துடைப்பே. இந்தக் குழுவின் பரிந்துரைகள் ஆள்குறைப்பையே பிரதானப்படுத்தும் என்பது நிதர்சனம்.
 அரசுப் பொதுத் துறை நிறுவனங்களை லாபகரமாக இயக்குவதன் மூலமே மாநிலத்தைப் பொருளாதார ரீதியில் நிலை நிறுத்த முடியும். எனவே, ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இந்த நிறுவனங்களில் 480 நாள்கள் பணி முடித்த நிரந்தரமற்ற தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
 புதுவைக்கு என பணி நிரந்தர உத்தரவாதச் சட்டத்தை இயற்ற வேண்டும். உரிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் அனைத்து அரசு நிறுவனங்களையும் மறுகட்டுமானம் செய்ய வேண்டும். ஊழல், முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.