புதுவை கோயில்கள் வரலாறு தொகுப்பு நூல் வெளியீடு 

சுற்றுலாப் பயணிகளுக்காக புதுவை கோயில்கள் வரலாறு பற்றிய தொகுப்பு நூல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. 

சுற்றுலாப் பயணிகளுக்காக புதுவை கோயில்கள் வரலாறு பற்றிய தொகுப்பு நூல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
 புதுவையில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் 232 கோயில்கள், 8 மடங்கள் உள்ளன. இக்கோயில்கள் விவரங்கள், அபூர்வ தகவல்கள் ஆகியவை புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.
 தமிழில் 541 பக்கங்களும், ஆங்கிலத்தில் 564 பக்கங்களும் உள்ளன. இவற்றில் கோயில் வரலாறு தொடங்கி அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளன.
 புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், ஆங்கில நூலை ஆளுநர் கிரண் பேடி வெளியிட, அதை முதல்வர் வே.நாராயணசாமி பெற்றுக் கொண்டார். பின்னர் ஆளுநர் கிரண்பேடி பேசியதாவது: சுற்றுலா வரும் வெளிமாநிலத்தவருக்கு இப்புத்தகம் உதவும். மசூதிகள், தேவாலயங்கள், சித்தர் நினைவிடங்கள் ஆகியவை இரண்டாவது நூலில் விரைவில் வெளியிட அறிவுறுத்தியுள்ளேன்.
 அரசு இணையதளம் மட்டுமல்லாமல் ஆளுநர் மாளிகை இணையத்திலும் வெளியிட அறிவுறுத்தியுள்ளேன். திருக்கோயில்களுக்கு செல்லும் வகையில் சிறப்புப் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். முதல்வர் நாராயணசாமி தமிழ் நூலை வெளியிட்டுப் பேசியதாவது: புதுவையில் உள்ள 240 கோயில்களில் 80 சதவீத கோயில்களுக்கு அறங்காவலர்கள் குழு நியமித்துள்ளோம். கோயில்கள் குளம், பூங்காவுடன் இருக்க நிதி ஒதுக்கி வருகிறோம். இப்பணிகளுக்காக மத்திய அரசு முதல் கட்டமாக ரூ. 98 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. திருக்காமீஸ்வரர் கோயில், திருக்காஞ்சி, திருநள்ளாறு உள்பட புகழ்பெற்ற திருத்தலங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளோம். இரண்டாவது தவணையாக ரூ. 98 கோடியை மத்திய அரசு தர உள்ளது. முதல் முறையாக நூல் வடிவில் கோயில் தல வரலாறுகளை புத்தகமாக்கியுள்ளோம். அதை இணையத்திலும் வெளிவர செய்வோம். குறுந்தகடுகளாகவும் தயாரிக்க உள்ளோம் என்றார். நிகழ்ச்சியில், முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமி நாராயணன், தலைமை செயலர் அஸ்வனிகுமார், இந்து சமய அறநிலையத் துறை செயலர் எஸ்.சுந்தரவடிவேலு, ஆணையர் பி.தில்லைவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதுச்சேரியில் உள்ள கோயில்களின் வரலாறு குறித்துட்ற்ற்ல்://ட்ழ்ண்ஜ்ஹந்ச்.ல்ஹ் ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com