அனைவருக்கும் கேஸ் இணைப்பு திட்டம்: 20-இல் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

மத்திய அரசின் அனைவருக்கும் கேஸ் இணைப்புத் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இணைப்பு வழங்கும் விழா வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று

மத்திய அரசின் அனைவருக்கும் கேஸ் இணைப்புத் திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இணைப்பு வழங்கும் விழா வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவன புதுவை மாநில முதுநிலை மேலாளர் பிரேமா தெரிவித்தார்.
 இது குறித்து செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
 மத்திய அரசு பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் மூலம் உஜ்வாலா பஞ்சாயத்து திட்டத்தை கடந்த 1-ஆம் தேதி அமல்படுத்தியுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு உருளை கிடைக்கச் செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
 திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 20-ஆம் தேதி புதுவையில் திம்மநாயக்கன் பாளையம், சேலியமேடு, ஊசுடு, சுத்துக்கேணி, இருளஞ்சந்தை, மணமேடு, கிருமாம்பாக்கம், அபிஷேகப்பாக்கம், பரிக்கல்பட்டு, பனையடிக்குப்பம் ஆகிய 10 கிராமங்களில் நடைபெற உள்ளது. இதை 20 எரிவாயு முகமை முகவர்கள் மேற்கொள்வார்கள்.
 புதுச்சேரியில் 2 சதவீதமான 9500 வீடுகளில்தான் எரிவாயு இணைப்பு இல்லை. அந்த வீடுகளிலும் இணைப்புகளை கொண்டு செல்லவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
 நிகழ்ச்சியில் எரிவாயு அடுப்புகளை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது? அதன் நன்மைகள் என்ன? போன்றவைகளை மக்களுடன் விவாதித்து விளக்க உள்ளோம்.
 மத்திய அரசு இணையதளத்தில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துதான் எரிவாயு முகமை முகவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் பிரதமர் புகைப்படம் இல்லை. ஆனால், நாங்கள் மேற்கொள்ளும் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சிகளை பிரதமர் புகைப்படத்தை வைத்துத்தான் செய்கிறோம் என்றார் அவர். பேட்டியின்போது புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்புத் தலைவரும், பாண்டுரங்கா கேஸ் முகமை முகவரான சிவசங்கர் உடனிருந்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com