Enable Javscript for better performance
சமூக பொறுப்புணர்வு திட்ட ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சமூக பொறுப்புணர்வுத் திட்ட ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    எண்ணெய்  மற்றும் எரிவாயு கழகத்தின் (ஓஎன்ஜிசி) சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ஏனாம் பிராந்தியத்தில்  மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சட்டப்பேரவை அமைச்சரவை அறையில் வியாழக்கிழமை நடைபெற்றது. 
    கூட்டத்துக்கு முதல்வர்  வே.நாராயணசாமி தலைமை வகித்தார். நலவழித் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் முன்னிலை வகித்தார்.  
    தலைமைச்  செயலர் அஸ்வனிகுமார்,  அரசுச் செயலர்கள் ஜவகர்,  பார்த்திபன்,  ஏனாம் மண்டல நிர்வாகி சுப்ரமணீஸ்வர ராவ்  மற்றும் எரிவாயு கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    கூட்டத்தில் ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின்  கீழ் ஏனாமில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai