Enable Javscript for better performance
சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 09th February 2018 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுச்சேரி சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    ஏஐடியூசி புதுச்சேரி மாநில சுற்றலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர் நலச் சங்கத்தின் கூட்டம்  பாக்கமுடையான்பட்டில் அண்மையில் நடைபெற்றது.  சங்கத்தின் தலைவர் முருகவேல் தலைமை வகித்தார்.  ஏஐடியூசி மாநிலச் செயலாளர் சேதுசெல்வம் சங்க எதிர்கால செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.
    கூட்டத்தில் செயலாளர் தமிழ்மணி, பொருளாளர் புவனேஷ், துணைத் தலைவர்கள் தேவநாதன், திருமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநிலச் செயலர் சேதுசெல்வம் கூறியதாவது: 
    புதுச்சேரி மாநிலம் சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. ஆனால், சுற்றுலா வாகனங்களை நிறுத்த போதுமான வசதியை அரசு ஏற்படுத்தித் தரவில்லை. இதனால் சுற்றுலா வாகனங்கள் சாலை ஓரங்களில் நிறுத்தும் நிலை இருந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, அரசு பாக்கமுடையான்பட்டு கிழக்குக் கடற்கரை சாலை,  நவீன மீன் அங்காடி அருகில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தின் ஒரு பகுதியை சுற்றுலா வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    புதுச்சேரி சுற்றுலா வாகன ஓட்டுநர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும். புதிய சாலைப் போக்குவரத்து மசோதாவால் வாகன ஓட்டிகளுக்கு நெருக்கடி ஏற்படும். எனவே, வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டத்தை இயற்றிட வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai