Enable Javscript for better performance
தேசிய அறிவியல் தினம்: பிப்.26-இல் தனித் திறன் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய அறிவியல் தினம்: பிப்.26-இல் தனித் திறன் போட்டிகள்

    By DIN  |   Published on : 09th February 2018 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய அறிவியல் தினவிழாவையொட்டி, புதுச்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறும் தனித்திறன் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
    புதுச்சேரி பல்கலைக்கழகம்,  இந்திய அறிவியலாளர்கள் கூட்டமைப்பு, புதுச்சேரி அறிவியல் இயக்கம் ஆகியவை இணைந்து தேசிய அறிவியல் தின விழாவை  நடத்துகிறது.
    பிப்.26-ம் தேதி புதுச்சேரி பல்கலைக்கழக மாநாட்டு மையத்தில் விழா நடைபெறுகிறது.
    இதனை முன்னிட்டு அறிவியல் மனப்பான்மை என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு,  நாடகம் மற்றும் வினாடி வினா போட்டிகள் நடைபெற உள்ளன.  போட்டிகள் 7, 8-ஆம் வகுப்பு மற்றும் 9 முதல் 11-ஆம்  வகுப்பு ஆகிய இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது. 
    அறிவியல் நாடகத்தில் 5 மாணவர்கள் மட்டுமே பங்குபெறலாம் (ஏதாவது ஒரு பிரிவில் மட்டும்) அதிகபட்சம் 8 நிமிடம்.  பேச்சுப்போட்டியில் ஒரு பள்ளியில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும் ஒரு மாணவர் பங்குபெறலாம். 
     போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். 
    போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும்,  வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். 
     எனவே, இப்போட்டியில் பங்குபெற விரும்பும் பள்ளிகள் பிப்.21-ஆம் மாலை 5 மணிக்குள் பதிவு செய்துகொள்ளலாம்.  
    மேலும் தகவல்களுக்கு  ‌i‌s​c​a‌p‌o‌n‌d‌i​c‌h‌e‌r‌r‌y@‌g‌m​a‌i‌l.​c‌o‌m, ‌ma‌i‌l‌t‌o:‌i‌s​c​a‌p‌o‌n‌d‌i​c‌h‌e‌r‌r‌y@‌g‌m​a‌i‌l.​c‌o‌m, 98421 24318, 0413-265458 விண்ணப்பங்களை w‌w‌w.‌p‌s‌f​c‌e‌r‌d.‌o‌r‌g ‌h‌t‌t‌p://‌w‌w‌w.‌p‌s‌f​c‌e‌r‌d.‌o‌r‌g என்ற இணையத்தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என போட்டிகளின் ஒருங்கிணைப்பாளர் அமுதா தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai