Enable Javscript for better performance
பாப்ஸ்கோ ஊழியர்கள் தொடர் போராட்டம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மாத நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி பாப்ஸ்கோ ஊழியர்கள் வியாழக்கிழமை முதல் தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
      புதுவை பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு 10 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியம் வழங்கக் கோரி அவர்கள் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆயினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
     இந்த நிலையில், நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரியும்,  நிர்வாக இயக்குநரை மாற்ற வலியுறுத்தியும், பாப்ஸ்கோ ஊழியர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.  
    அப்போது அவர்கள் மாலைக்குள் பேச்சுவார்த்தை நடத்தப்படாவிடில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
    அதன்படி, வியாழக்கிழமை காலை பாப்ஸ்கோ ஊழியர் மற்றும் தொழிலாளர் நல சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் பாப்ஸ்கோ அலுவலகம் முன் வியாழக்கிழமை காலை முதல் தொடர் போராட்டத்தை தொடங்கினர். 
    போராட்டத்துக்கு சங்கத் தலைவர் மாரிப்பன் தலைமை வகித்தார்.  
    சங்க பொறுப்பாளர் வெற்றிச்செல்வன்,  பாலமோகனன்,  சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  இதனால் பாப்ஸ்கோ மூலம் இயங்கும் காய்கறி கடைகள் இயங்கவில்லை.  பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai