Enable Javscript for better performance
புதுவையில் தொழுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: நலவழித் துறை அதிகாரி தகவல்- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் தொழுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு: நலவழித் துறை அதிகாரி தகவல்

    By DIN  |   Published on : 09th February 2018 08:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மாநிலத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தொழுநோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று  நலவழித் துறை உதவி இயக்குநர் ஆனந்தன் தெரிவித்தார். 
    இது குறித்து புதுச்சேரியில் அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: உலகளவில் இந்தியா, பிரேசில், இந்தோனேஷியாவில்தான் தொழுநோய் அதிகமாக உள்ளது.  சுமார் 1.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். 
    ஆனாலும், இந்திய மக்கள் தொகையில் 10 ஆயிரம் பேருக்கு ஒருவருக்கும் கீழ் என்ற நிலையில் தான் உள்ளது.  தொழுநோய் ஏழைகள் மற்றும் சத்தான உணவுப் பொருள்களை சாப்பிடாதவர்களுக்கு ஏற்படுகிறது. 
    தொடக்க நிலையிலேயே தொழுநோயை கண்டறிவது சிறந்தது.  தேசிய தொழுநோய் ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் காந்தியின் நினைவு தினமான ஜன.31-ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  
    புதுவையில் தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அதனால்தான் இங்கு 10 ஆயிரத்திற்கு 0.22 என்ற விகிதத்தில் தொழுநோயாளிகள் உள்ளனர். 
    2016-17-ஆம் ஆண்டு 32 பேர் மட்டுமே தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.  ஆனால், நிகழாண்டில் ஜனவரி வரை இந்த எண்ணிக்கை  40ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரியில் 31,  காரைக்காலில் 8,  மாஹேவில் 1 என 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் 14 பேர் மாணவர்கள் ஆவர்.  
    6 மாதம் வரை மாத்திரை சாப்பிட்டால் முற்றிலும் குணப்படுத்தி விடலாம் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai