Enable Javscript for better performance
பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து இடதுசாரிகள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து இடதுசாரிகள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 09th February 2018 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து இடதுசாரிகள் புதுச்சேரியில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து புதுவையில் வெளிமாநிலம் செல்லும் பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது.  இதற்கு அரசியல் கட்சியினர்,  கல்லூரி மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,  பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
    இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் நாரா.கலைநாதன்,  நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அபிஷேகம், சேதுசெல்வம்,  தினேஷ் பொன்னையா,  மார்க்சிஸ்ட் பிரதேச செயலர்  ராஜாங்கம்,  மாநிலக் குழு உறுப்பினர்கள் பெருமாள்,  முருகன்,  தன்ராஜ்,  மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன்,  பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
     இதனால் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வர முடியாமல் நின்றன.  இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட வலியுறுத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai