Enable Javscript for better performance
மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது கிரண் பேடியின் சுட்டுரை பக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது கிரண் பேடியின் சுட்டுரை பக்கம் 

    By DIN  |   Published on : 09th February 2018 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாகிஸ்தான் தீவிரவாதிகளால் முடக்கப்பட்ட புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் சுட்டுரை (டுவிட்டர்) பக்கம் வியாழக்கிழமை காலை முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.
    புதுவை ஆளுநராக கிரண் பேடிபொறுப்பேற்றது முதல் கட்செவி அஞ்சல்,  சுட்டுரை போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தனது  கள ஆய்வு விவரங்கள்,  அரசு நிகழ்ச்சிகள்,  தனது அறிக்கைகள்,  தான் பங்கேற்ற அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளின் விவரங்களை வெளியிட்டு வருகிறார்.  சில நேரங்களில் இவரது தகவல்கள் பரபரப்பையும்  ஏற்படுத்தும். 
    இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி மாலை திடீரென ஆளுநரின் சுட்டுரை பக்கம் முடக்கப்பட்டது. 
    இது குறித்து தில்லியில் உள்ள சமூக வலைதளங்களை கண்காணிக்கும் அமைப்பிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.  அந்த அமைப்பு நடத்திய விசாரணையில் பாகிஸ்தான் ஆதரவு அமைப்பான புரோதர்கீஸ் என்ற வலைதள ஹாக்கர்கள், கிரண் பேடி உள்ளிட்ட 6 பேரின் சுட்டுரை பக்கத்தை முடக்கியிருப்பது தெரிய வந்தது.
    இதையடுத்து, ஆளுநரின் சுட்டுரை பக்கத்தை இயங்க வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன் பலனாக வியாழக்கிழமை காலை மீண்டும் ஆளுநர் கிரண் பேடியின் சுட்டுரை பக்கம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து, கிரண் பேடி சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:
    நான் கடுமையான தாக்குதலுக்குப் பிறகு மீண்டும் வந்துள்ளேன்.  நாம் நேர்மறை ஆற்றலின் பிரபஞ்சம்.  நாம் தொடர்ந்து இருக்க வேண்டும்.  எனது கணக்கை புதுப்பித்து கொடுத்ததற்கு நன்றி.
     பயன்படும் வகையில் தலையீடுகள் செய்த எனது சமூக வலைதளக் குழுவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai