Enable Javscript for better performance
மும்பை துறைமுகத்தை பார்வையிட்ட புதுவை அமைச்சர்- Dinamani

சுடச்சுட

    

    அரசு முறைப் பயணமாக மும்பை துறைமுகத்துக்கு புதுச்சேரி சமூக நலன் மற்றும் துறைமுகத் துறை அமைச்சர் மு.கந்தசாமி தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் சென்றுள்ளனர்.
    முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு புதுச்சேரி துறைமுகத்தை செயல்பாட்டிற்குக் கொண்டுவர தீவிர முயற்சி எடுத்து வருகிறது. 
    அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் சட்டப்பேரவை பொது கணக்குக் குழுவும்,  மதிப்பீட்டுக் குழுவும்  புதுச்சேரி துறைமுகத்தை ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. 
    அதன் தொடர்ச்சியாக மும்பையில் உள்ள துறைமுகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து,  அதில் உள்ள சிறந்த செயல்பாடுகளை புதுச்சேரியில் அமல்படுத்தவும், தவறான  செயல்பாடுகளை தவிர்க்கவும் பரிந்துரை செய்ய இரு குழுக்களும் முடிவு செய்தது. 
    அதன்படி,  மும்பை துறைமுகத்துக்கு அமைச்சர் கந்தசாமி மற்றும் பொது கணக்குக் குழுத் தலைவர் இரா.சிவா எம்.எல்.ஏ., மதிப்பீட்டுக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன்  எம்.எல்.ஏ.  ஆகியோர் தலைமையில் உறுப்பினர்கள் வியாழக்கிழமை மும்பை துறைமுகங்களுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    இதில், பேரவை துணைத் தலைவர் வே.பொ. சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள்  லட்சுமிநாராயணன்,  அனந்தராமன்,  பாஸ்கர்,  தீப்பாய்ந்தான், அசனா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 
    இது குறித்து லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. கூறியதாவது:
    புதுச்சேரியில் விரைவில் செயல்பட உள்ள துறைமுகத்தை சிறப்பாக இயக்குவதற்கான ஆலோசனைகளை அரசுக்கு வழங்க மும்பை துறைமுகங்களை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். 
    அதன்படி, வியாழக்கிழமை மும்பை வந்த நாங்கள்,  மும்பையில் உள்ள பழைய துறைமுகத்தை பார்வையிட்டோம்.  பழைய துறைமுகம் நகரின் மையத்தில் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, அது பயணிகள் வந்து செல்லும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. மற்றொரு தனியார் துறைமுகம் சரக்கு ஏற்றி,  இறக்கும் துறைமுகமாக உள்ளது. அங்கும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். 
    மகாராஷ்டிர சட்டப்பேரவை பொது கணக்குக்குழு, மதிப்பீட்டுக்களின் செயல்பாடுகள் குறித்தும் அறிய உள்ளோம் என்றார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai