Enable Javscript for better performance
லாசுப்பேட்டையில்  வளர்ச்சிப் பணிகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    புதுவை லாசுப்பேட்டை தொகுதியில் ரூ.40.72 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் புதன்கிழமை தொடங்கப்பட்டன.
    பணிகளை தொகுதி எம்எல்ஏவும்,  பேரவை துணைத் தலைவருமான வே.பொ.சிவக்கொழுந்து தொடக்கிவைத்தார்.  லாசுப்பேட்டை குறிஞ்சிநகர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து உழவர்கரை நகராட்சி மூலம் குறிஞ்சிநகர் 2-ஆவது பிரதான சாலையில் ரூ.8.38 லட்சம் செலவில் வடிகால் வசதியுடன் தார் சாலை அமைக்கப்பட்டன.  
    2, 4, 6, 7, 8, 9-ஆவது சாலைகள்,  முதல் நடுத்தெரு,  2-ஆவது நடுத்தெரு ஆகிய வீதிகளில் ரூ.11.45 லட்சம் செலவில் வடிகால் வசதியுடன் தார் சாலை அமைக்கும் பணி, குறிஞ்சிநகர் விரிவு பகுதியில் உள்ள அனைத்து உட்புற வீதிகளுக்கும் ரூ.21.89 லட்சம் செலவில் வடிகால் வசதியுடன் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து தொடக்கிவைத்தார். 
    நிகழ்ச்சியின்போது உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ்,  செயற்பொறியாளர் குணசேகரன்,  உதவிப் பொறியாளர் கலிவரதன்,  இளநிலைப் பொறியாளர் ஆனந்தன்,  தொகுதி நிர்வாகிகள்,  நலவாழ்வுச் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai