கவிதைப் போட்டிக்கு ஜூலை 3-க்குள் படைப்புகளை அனுப்பலாம்

கவிதைப் போட்டியில் பங்கேற்க ஜூலை 3-ஆம் தேதிக்குள் தங்களது படைப்புகளை அனுப்பலாம் என்று புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் அறிவித்துள்ளது.

கவிதைப் போட்டியில் பங்கேற்க ஜூலை 3-ஆம் தேதிக்குள் தங்களது படைப்புகளை அனுப்பலாம் என்று புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் நிறுவனர் ஆறுசெல்வம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் சார்பில், தமிழ் பழமொழிகளின் சிறப்புகளை யாவரும் அறியும் வண்ணம் பழமொழி காட்டும் பண்புகள்' என்ற தலைப்பில் வரும் ஜூலை 7-ஆம் தேதி நடக்கும் விழாவில், கவிதைப் போட்டி மற்றும் கவியரங்கம் இடம் பெறுகின்றன.
தமிழ்ப் பழமொழிகள்' எனும் தலைப்பில் நடத்தப்படும் கவிதைப் போட்டியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். மரபுக் கவிதை 16 வரிகளுக்குள்ளும், புதுக் கவிதை 60 சொற்களுக்குள்ளும் இருக்க வேண்டும். வெற்றி பெறும் கவிஞர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டிக்கான கவிதைகளை ஜூலை 3-ஆம் தேதிக்குள், ஆறுசெல்வன், புதுச்சேரி படைப்பாளர்
இயக்கம், எண் - 4, காமராசர் தெரு, வி.பி.சிங் நகர், சண்முகாபுரம், புதுச்சேரி - 9 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கவிதைகளை  மின்னஞ்சலிலும் அனுப்பலாம். மேலும், தகவல் பெற 98947 55985 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com