Enable Javscript for better performance
அப்துல் கலாமின் சிந்தனை, செயல்பாடுகளை பயன்படுத்தி மாணவர்கள் முன்னேற வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    அப்துல் கலாமின் சிந்தனை, செயல்பாடுகளை பயன்படுத்தி மாணவர்கள் முன்னேற வேண்டும்

    By DIN  |   Published on : 01st June 2018 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சிந்தனை, செயல்பாடுகளை பயன்படுத்தி மாணவர்கள் முன்னேற வேண்டும் என்று சமூகநலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி அறிவுறுத்தினார்.
    புதுச்சேரி லாஸ்பேட்டை அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் 8 மற்றும் 
    9}ஆவது வகுப்பு மாணவர்களுக்கான கோடை கால அறிவியல் பயிற்சி முகாம் மே 1 முதல் தொடர்ந்து 31 நாள்கள் நடைபெற்றன. இப்பயிற்சியை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
    இதில் அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு, சிறந்த அறிவியல் முகாம் மாணவர், சிறந்த அறிவியல் குழு மாணவர்கள் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கிப் பேசியதாவது:
    கோடை விடுமுறையில் பாட்டி வீட்டுக்கு செல்லாமல் அறிவியல் முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டுகள். இந்த பயிற்சி முகாமில் அரசு பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிகமாக பங்கேற்றுள்ளனர். தனியார் பள்ளி மாணவர்களுக்கு அதிக ஆர்வம் வந்துள்ளது. அதேபோல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை வரவழைக்க வேண்டும். கிராமப்புற மாணவர்கள் இங்கு பயிற்சி பெற வருவதில் சிரமங்கள் உள்ளன. எனவே, அடுத்தாண்டு ஒவ்வொரு தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் கோடை அறிவியல் முகாம் நடத்த வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளேன். 
    முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நம்மைவிட்டு மறைந்தாலும் அவருடைய சிந்தனைகள், செயல்பாடுகள் நம்மைவிட்டு மறையவில்லை. ஒவ்வொரு மாணவரும் அப்துல் கலாமின் சிந்தனை, செயல்பாடுகளை பயன்படுத்தி முன்னேற வேண்டும். மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டும் போதாது. ஒழுக்கமாகவும், தவறான சிந்தனைகள் இல்லாமலும் இருக்க வேண்டும் என்றார். 
    முகாமின் போது மாணவர்கள் உருவாக்கிய பொம்மலாட்ட உருவங்கள், பறவை குடில், மின்னணு செய்முறைகள் மற்றும் கலை அம்சங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்தன. இதில் 88 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு 25 வல்லுநர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai