Enable Javscript for better performance
அரசு மானியத்தை வேறு செலவுக்கு பயன்படுத்தக்கூடாது: துணைநிலை ஆளுநர் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    அரசு மானியத்தை வேறு செலவுக்கு பயன்படுத்தக்கூடாது: துணைநிலை ஆளுநர் உத்தரவு

    By DIN  |   Published on : 01st June 2018 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு மானியத்தை வேறு செலவுக்கு பயன்படுத்தக்கூடாது என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
    புதுவையில் உள்ள அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு ஆண்டு தோறும் சுமார் ரூ.500 கோடி வரை நிதி வழங்கி வருகிறது. ஆனால், அந்த நிறுவனங்களில் இருந்து எதுவும் அரசுக்கு திரும்ப கிடைப்பதில்லை. 
    புதுவை காதி, கிராமத் தொழில் வாரியம் கடந்த 2017}18}ஆம் நிதியாண்டில் ரூ.2.8 கோடிக்கு பொருள்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.9 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.
    இது பற்றி அறிந்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடி புதன்கிழமை காதி, கிராமத் தொழில் வாரிய அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். 
    அதன் பின்னர் பின்வரும் குறிப்புகளை எழுதினார்:
    காதி, கிராமத் தொழில் வாரியம் ஊழியர்கள் அரசு ஊழியர்கள் அல்ல. எனவே, தொழில் துறையோ, நிதித்துறையோ அந்த ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்க பொறுப்பு அல்ல. ஊதியத்துக்கு ஊழியர்களே சம்பாதிக்க வேண்டும். 
    அரசு மானியம் அளிப்பது மூலதனம் மற்றும் முதலீட்டு அடிப்படை தேவைகளுக்குத்தான். ஊதியத்துக்கு அல்ல. தொழில் துறைச் செயலர் வாரிய கூட்டத்தை கூட்டி தொழில் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 
    அரசு சார்பு நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கும்போது உற்பத்தி மற்றும் சேவை மேம்பாட்டிற்குத்தான் செலவு செய்யப்படுகின்றனவா? என்று உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். அரசு மானியத்தை வேறு செலவுக்கு பயன்படுத்தக்கூடாது என்பதையும் பார்க்க வேண்டும். இது தொடர்பாக அரசு நிறுவனங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai