Enable Javscript for better performance
தயார் நிலையில் பாடப் புத்தகங்கள்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்காலில் 1 முதல் 12 }ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தரப்படும் இலவச பாடப் புத்தகங்கள் வியாழக்கிழமை காரைக்கால் வந்தடைந்தன.
    ஜூன் 4 }ஆம் தேதி மாணவர்கள் கையில் புத்தகங்கள் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் அ. அல்லி தெரிவித்தார்.
    காரைக்கால் பகுதிக்கு வர வேண்டிய பாடப் புத்தகங்கள் கோடை விடுமுறைக் காலத்திலேயே வரவழைத்து, பள்ளிகள் திறந்தவுடன் விநியோகிக்கப்படுமென கல்வி அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதன்படி, மாநில கல்வித்துறையினர் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
    இதன் அடிப்படையில், கடலூர் புத்தகக் கிடங்கிலிருந்து காரைக்கால் மாவட்டத்துக்கான பாடப் புத்தகங்கள் வியாழக்கிழமை வந்து சேர்ந்தன. இவை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகக் கிடங்கில் வைத்து, பள்ளிகள் வாரியாக தர வேண்டிய புத்தகங்கள் பிரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai