Enable Javscript for better performance
நவீன நிலப் பதிவேடுகள் பாதுகாப்பு அறைகள் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுவையில் நவீன நிலப் பதிவேடுகள் பாதுகாப்பு அறைகளை முதல்வர் வே.நாராயணசாமி வியாழக்கிழமை திறந்துவைத்தார்.
    புதுவை அரசின் நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை தேசிய நில பதிவேடுகள் நவீனமயமாக்கல் செயல் திட்டம் என்னும் திட்டத்தை மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தி வருகிறது. 
    இத்திட்டத்தின் நோக்கம் பரந்த, வெளிப்படையான மற்றும் நவீன நில ஆவண மேலாண்மை முறைகளை மேற்கொண்டு உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை அளிப்பதே ஆகும். 
    இத்திட்டத்தின் கீழ் நில ஆவணங்களை கணினிமயமாக்குதல் பணி நிறைவு பெற்றுள்ளது. நில வரைபடங்களில் இடம் சார்ந்த விவரங்களை ஒருங்கிணைக்கும் பணியும் முழுமை அடைந்துள்ளது. கணினி மயமாக்கப்பட்ட நில சம்பந்தமான விவரங்களை வலைதளத்தில் ஏற்றி பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 
    இத்திட்டத்தின் கீழ் ஐந்து நவீன நிலப்பதிவேடுகள் பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டுள்ளன. நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் இரண்டு மற்றும் புதுச்சேரி, உழவர்கரை, வில்லியனூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் தலா ஒன்று என நிலப்பதிவேடுகள் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    புதுச்சேரி சாரம் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் நவீன நிலப்பதிவேடுகள் பாதுகாப்பு அறைகளை திறக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 
    முதல்வர் நாராயணசாமி பங்கேற்று திறந்து வைத்தார். 
    நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், மாவட்ட ஆட்சியர் சத்தியேந்திர சிங் துர்சாவாத், நில அளவைத் துறை இயக்குநர் முனுசாமி, மாவட்ட துணை ஆட்சியர்கள் உதயகுமார், தில்லைவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai