Enable Javscript for better performance
நியாய விலைக் கடை ஊழியர்கள் பிரச்னை: முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி- Dinamani

சுடச்சுட

    

    நியாய விலைக் கடை ஊழியர்கள் பிரச்னை: முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

    By DIN  |   Published on : 01st June 2018 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வர் நாராயணசாமியுடன் நியாய விலைக் கடை ஊழியர்கள் வியாழக்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 
    புதுவை நியாய விலைக் கடை ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் 17 மாத நிலுவை ஊதியம் வழங்க வலியுறுத்தி கடந்த 25}ஆம் தேதி முதல் இலவச அரிசி வழங்கும் பணியை புறக்கணித்து புதுச்சேரி கூட்டுறவு ஊழியர் சங்க அலுவலகம் எதிரில் தர்னா போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் மக்கள் இலவச அரிசி கேட்டு ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தும் வருகின்றனர்.
    இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது குறித்து வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். 
    இதில் அமைச்சர்கள் மு.கந்தசாமி, இரா. கமலக்கண்ணன், திமுக எம்எல்ஏ சிவா, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார் மற்றும் அதிகாரிகள், நியாய விலைக் கடை ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி 3 மாத ஊதியம் வழங்குவதாகவும், அதற்கும் ஒரு வார கால அவகாசம் ஆகும் என்றும் தெரிவித்து, உடனடியாக அரிசியை வழங்க ஊழியர்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஊழியர்கள் 5 மாத ஊதியம் வழங்க வேண்டும், அதுவும் வழங்கிய பின்னரே அரிசியை வழங்குவோம் என்று தெரிவித்தனர். 
    இதனால் நியாய விலைக் கடை ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai