Enable Javscript for better performance
புதுவையிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    புதுவையிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை

    By DIN  |   Published on : 01st June 2018 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரளத்தைப் போல புதுவையிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர் வே.நாராயணசாமி.
    இதுகுறித்து, செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: மத்திய அரசின் ரூ.1.5 கோடி நிதியில் நவீன நிலப்பதிவேடுகள் பாதுகாப்பு அறைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு பத்திரங்களும் பாதுகாப்பாக வைக்கப்படும். பட்டா ஆவணங்களும் பாதுகாக்கப்படும். 
    அறைகளை திறப்பதற்கான ரகசிய எண் அதிகாரிகளுக்குத் தான் தெரியும். அடுத்த கட்டமாக பாகூர், காரைக்கால், மாஹே, ஏனாமில் கட்டப்படும். அனைத்து ஆவணங்களும் கணினியில் சேகரித்து வைக்கப்படும். இதனால் அனைத்து ஆவணங்களும் கேட்டவுடன் கிடைக்கும். 
    பாரதியார் பாடிய குயில்தோப்பு நில மோசடி விவகாரம் சிவில் விவகாரம் என்பதால் அதில் அரசு தலையிட முடியாது. தவறு காங்கிரஸ் கட்சியினர் செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். 
    கேரள மாநில அரசுக்கான வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை ரூ.1 குறைத்தது போல, புதுவையிலும் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார் முதல்வர் நாராயண
    சாமி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai