Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் அரிசி வழங்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் அரிசி வழங்க உத்தரவு

    By DIN  |   Published on : 01st June 2018 10:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம்தோறும் அரிசி வழங்க சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி உத்தரவிட்டார்.
    புதுவை சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பட்டுத்துறை, குடிமைப் பொருள் வழங்கல் துறை, கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    அமைச்சர் கந்தசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடர் வருவதையொட்டி சமூக நலம், ஆதிதிராவிடர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, குடிமைப் பொருள் வழங்கல், கூட்டுறவு ஆகிய துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அதற்கு செலவு செய்யப்படும் நிதிகள், நிலுவையில் உள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கந்தசாமி கேட்டறிந்தார்.
    அதைத் தொடர்ந்து, திட்டங்களை செயல்படுத்த தேவைப்படும் நிதி, துறைகளுக்கான வளர்ச்சித் திட்டங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிலை, துறை வாரியாக உள்ள காலியிடங்களை நிரப்புவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்தார். 
    மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு காலம் தாழ்த்தாமல் மாதம்தோறும் அரிசி வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் கந்தசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நிகழ்ச்சிக்கு அரசின் தலைமைச் செயலர் அஸ்வனி
    குமார் முன்னிலை வகித்தார். 
    நிதித்துறைச் செயலர் கந்தவேலு, அரசுச் செயலர் சுந்தரவடிவேலு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (பொ) சிவக்குமார், சமூக நலத்துறை இயக்குநர் சாரங்கபாணி, ஆதிதிராவிடர் நலத்துறை ரகுநாதன், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநர் யஷ்வந்தையா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai