Enable Javscript for better performance
முதல்வர் பிறந்த நாள்: உணவு வழங்கிய அரசுக் கொறடா- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் நாராயணசாமியின் 71}வது பிறந்த நாளையொட்டி, ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு அரசுக் கொறடா ஆர்.கே.ஆர்.அனந்தராமன் வியாழக்கிழமை காலை உணவு வழங்கினார்.
    முதல்வர் பிறந்த நாளையொட்டி, அவருக்கு அவரது ஆதரவாளர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 
    அதன்படி, புதுவை பிரதேச காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் தேவதாஸ் தலைமையில் பொதுச்செயலாளர் சிவகாமி, செயலாளர் திருமுருகன், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் மணி, கோவிந்தராஜன், எஸ்சி பிரிவு தலைவர் வீரமுத்து, சிறப்பு அழைப்பாளர் சேகர், நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் நாகேஷ்சேட், வழக்குரைஞர் பிரிவுத் தலைவர் மருதுபாண்டியன் உள்பட பலர் வியாழக்கிழமை முதல்வரை சந்தித்து சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்
    தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை அவர் விரும்பாததால் பிறந்த நாளில் மகாராஷ்டிர மாநிலம், கொள்ளூரில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபட்டார். 
    இந்த நிலையில், புதுச்சேரிக்கு வியாழக்கிழமை திரும்பிய அவரை காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானோர் இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai