Enable Javscript for better performance
ரஜினி கூறியது அவரது சொந்தக் கருத்தா என்பதில் சந்தேகம்: மு.க.ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    

    ரஜினி கூறியது அவரது சொந்தக் கருத்தா என்பதில் சந்தேகம்: மு.க.ஸ்டாலின்

    By DIN  |   Published on : 01st June 2018 10:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்தா அல்லது பாஜக, அதிமுகவின் கருத்தா என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
    திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
    இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் புதுச்சேரிக்கு வியாழக்கிழமை வந்தார்.
    அவரை புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்எல்ஏ, வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்தா என்பது சந்தேகமாக உள்ளது. அவரின் குரல், பாஜக அல்லது அதிமுகவின் குரலா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் அவர் சூப்பர் ஸ்டார். சமூக விரோதிகள் யார் என தனக்குத் தெரியும் என்று அவரே சொல்லி இருக்கிறார். ஆகவே, சமூக விரோதிகள் யார் என்பதை அவரே நாட்டுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அவ்வாறு அடையாளம் காட்டுவது நல்லதாக அமையும். அதைச் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
    மேலும், போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை. ஜல்லிக்கட்டுக்கு தடை உள்ளிட்டவற்றுக்கு போராட்டம் நடத்தித்தான் தீர்வு காணப்பட்டது என்பது ரஜினிக்குத் தெரியும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai