Enable Javscript for better performance
10 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் 10 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சர்வதேச புகையிலை தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 
    இதனையொட்டி, அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதுச்சேரி நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை நடைபெறுகிறதா என வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர். உணவுப் பாதுகாப்பு அதிகாரி தன்ராஜ் தலைமையில் அதிகாரிகள் அண்ணா சாலை, ரங்கப்பிள்ளை வீதி, காந்தி வீதி, புஸ்சி வீதி, பிள்ளைத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று சோதனையிட்டனர்.
    சோதனையில் ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு கடையில் 10 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5,000 ஆகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai