Enable Javscript for better performance
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரம்

    By DIN  |   Published on : 02nd June 2018 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
     புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வலியுறுத்தி, விழிப்புணர்வு வாகன பிரசாரம்  மேற்கொள்ளப்பட்டது.  புதுவை சட்டப்பேரவை எதிரே இந்த பிரசாரத்தை முதல்வர் நாராயணசாமி கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
    இந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் தலைவர் எட்வர்டு சார்லஸ்,  பொதுச் செயலர் துளசி,  பொருளாளர் ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
    இந்த பிரசார வாகனத்தின் போது, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதால் கிடைக்கும் 
    நன்மைகள், சலுகைகள்,  பயன்கள் குறித்து அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கைகள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai