Enable Javscript for better performance
காரைக்கால் ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்கால் ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 02nd June 2018 09:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு  கொண்டுவர வேண்டும் என்று  புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தி யுள்ளது.
    இதுகுறித்து, அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
    காரைக்கால் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த மே 29-ஆம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை அஞ்சல் நிலையம் முன் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  
    அதற்கான கடிதத்தை புதுவை அரசுக்கு கடந்த மே 3-ஆம் தேதியே வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,  அரசிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்காத சூழ்நிலையில் போராட்டம் தொடர் கிறது. 
    இப்போராட்டம் கல்வி அமைச்சரின் கவனத்துக்கு வந்துள்ளதாகவும், பதவி உயர்வு,  ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும், ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்காக அமைச்சருக்கு அரசு ஊழியர் சம்மேளனம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
    அதே நேரத்தில், காரைக்காலில் 2 முதல் மூன்றரை ஆண்டுகள் வரை பணியாற்றி கொண்டிருக்கும் ஆசிரியர்களை புதுச்சேரிக்கு மாற்றல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற ஒப்புக்கொண்டு,  அதற்கான கோப்பும் தயார் நிலையில் இருந்தும் அந்த மாற்றல் உத்தரவு வெளிவராமல் இருப்பதுதான் வேதனை அளிக்கிறது.
    மேற்படி மாற்றல்களை கோடை விடுமுறை முடியும் முன் வெளியிட்டு ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கும் முடிவையும் அரசு கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai