Enable Javscript for better performance
செவிலியர் பற்றாக்குறையைப் போக்க விரைவான நடவடிக்கை தேவை- Dinamani

சுடச்சுட

    

    செவிலியர் பற்றாக்குறையைப் போக்க விரைவான நடவடிக்கை தேவை

    By DIN  |   Published on : 02nd June 2018 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்கால் மருத்துவமனையில் நிலவும் செவிலியர் பற்றாக்குறையைக் களைய புதுச்சேரி அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செவிலியர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
    புதுச்சேரி செவிலியர் நலச் சங்கத் தலைவி எஸ். ஜானகி, அமைப்புச் செயலர் முகமது பீவி உள்ளிட்டோர் சார்பு ஆட்சியரும், மாவட்ட ஆட்சியர் (பொ)  ஏ. விக்ரந்த் ராஜாவை வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பது: காரைக்கால் மருத்துவமனையில் ஏற்கெனவே 15 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ள நிலையில், உயர் படிப்பு, பிரசவ விடுப்பு, சேவை மாற்றம் (சர்வீஸ் பிளேஸ்மென்ட்) போன்ற காரணங்களால் 45 இடங்கள் மேலும் காலியாக இருக்கின்றன. காரைக்காலில் மக்கள் தொகை பெருக்கத்துக்கேற்ப  சாலை விபத்துகளும் அதிகரித்துள்ளன. இதை எதிர்கொள்ளும்போது செவிலியர்களுக்கு மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படுகிறது. 
    டயாலிஸிஸ் சிகிச்சைக்கு உரிய வல்லுநர்கள் இல்லை. ரத்த வங்கியிலும் வல்லுநர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது. இவற்றையெல்லாம் செவிலியர்கள் கண்காணிக்க வேண்டியுள்ளது. எனவே காலியாக இருக்கும் செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai