Enable Javscript for better performance
நாளை குடிமைப் பணிகள் தேர்வு:  புதுச்சேரியில் 3,449 பேர் எழுதுகின்றனர்- Dinamani

சுடச்சுட

    

    நாளை குடிமைப் பணிகள் தேர்வு:  புதுச்சேரியில் 3,449 பேர் எழுதுகின்றனர்

    By DIN  |   Published on : 02nd June 2018 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடிமைப் பணிகள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 3) நடைபெறவுள்ள நிலையில், புதுச்சேரியில் 9 மையங்களில் 3,449 பேர் தேர்வை எழுத உள்ளனர்.
    இதுகுறித்து புதுவை அரசின் பணியாளர்,  நிர்வாகச் சீர்திருத்தத் துறை சார்பு செயலர் ஜெய்சங்கர்  வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
    மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்,  அகில இந்திய அளவில் குடிமைப் பணிகள் (முதல் நிலை) தேர்வு  மையங்களை புதுச்சேரியிலும் அமைத்துள்ளது.  இந்த தேர்வு  ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
    இதற்காக புதுச்சேரியில் 9 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுகள் காலை 9.30 மணிமுதல் 11.30 மணி வரையிலும்,  பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் நடைபெறுகிறது. புதுச்சேரி லாசுப்பேட்டை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 2 மையங்களில் தலா 500 பேரும்,  லாசுப்பேட்டை மகளிர் பாலிடெக்னிக்கில் 400 பேரும்,  லாசுப்பேட்டை வள்ளலார் அரசுப் பள்ளியில் 400 பேரும்,  பாக்குமுடையான்பட்டு இதயா மகளிர் கல்லூரியில் 400 பேரும்,  உப்பளம் அம்பேத்கர் சாலை இமாக்குலேட் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ல 2 மையங்களில் தலா 400 பேரும்,  காந்தி வீதி பெத்திசெமினார் பள்ளியில் 435 பேரும்,  செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா பள்ளியில் மாற்றுத் திறனாளிகள் 14 பேரும் என மொத்தம் 3,449 பேர் தேர்வை எழுதுகின்றனர்.
    இந்தத் தேர்வு மையங்களுக்குச் செல்ல காலை 7 முதல் 9 மணி வரை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  அதுபோல,  தேர்வு முடிந்த பின்னர் மாலை 4.30 மணியில் இருந்து புதுச்சேரி பேருந்து நிலையத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயங்கும். தேர்வு மையங்களுக்குத் தேர்வர்கள் 10 நிமிடங்களுக்கு முன்னதாக வந்துவிட வேண்டும்.  தேர்வு மையத்துக்குள் செல்லிடப்பேசி உள்ளிட்ட எந்த விதமான தொடர்பு சாதனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது.  
    தேர்வின் போது, ஒழுங்கீனங்கள் கண்டுபிடிக்கப்பட்டால், எதிர்காலத்தில் தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாதபடி தடை செய்யப்படும். இந்தத் தேர்வுக்கான கட்டுப்பாட்டு அறை,  புதுவை பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள இணை இயக்குநர் அலுவலகத்தில் சனிக்கிழமை,  ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூன் 2, 3)  காலை 8  முதல் இரவு 8 மணி வரை இயங்கும். இங்கு தேர்வு தொடர்பான சந்தேங்களுக்கு அணுகலாம்.  மேலும், 0413 - 2207203, 2207260 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் 
    தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai