Enable Javscript for better performance
புதுவை முதல்வர் அறையில் காணொலிக் காட்சி கருவி திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுவை முதல்வர் அறையில் காணொலிக் காட்சி கருவி திறப்பு

    By DIN  |   Published on : 02nd June 2018 09:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அறையில்  ரூ. 10 லட்சம் செலவில் காணொலிக் காட்சி கருவி முதல் முறையாக வெள்ளிக்கிழமை மாலை இயக்கப்பட்டது.
     இதன் திறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.  முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு காணொலிக் காட்சிப் பிரிவைத் திறந்துவைத்தார்.  அப்போது தில்லியில் உள்ள புதுவைக்கான பொறுப்பு அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமியுடன் காணொலிக் காட்சி மூலம் உரையாடினார்.
     தொடர்ந்து மாஹே அதிகாரிகளுடன் பேசிய முதல்வர்,  மாஹேவில் நிபா வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.  மேலும்,  ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மக்களுக்கு பரிசோதனை நடத்த சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா?  காய்ச்சலில் இருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா? என்றும் முதல்வர் கேட்டறிந்தார். 
    அப்போது, அங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கினர்.  இதே போல,  ஏனாம் அதிகாரிகளிடம் பேசிய முதல்வர்,  சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏதேனும் உள்ளதா என்றும், சூதாட்டம் போன்ற சமூக விரோதச் செயல்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.  
    இதற்கு அதிகாரிகள் அவ்வாறு ஒன்றும் இல்லை என்று பதிலளித்தனர்.  இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன்,  தீப்பாய்ந்தான்,  புதுவை அரசின் தில்லி  சிறப்புப் பிரதிநிதி ஜான்குமார்,  தலைமைச் செயலர் அஸ்வனிகுமார்,  அரசு செயலர்கள் அன்பரசு, மணிகண்டன், என்ஐசி அதிகாரி தேவ் ரத்ன சுக்லா உள்பட அரசுத் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள்,  மாவட்ட தலைமை அலுவலகங்கள் என 1,400 இடங்களில் காணொலிக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai