Enable Javscript for better performance
பொறியியல், செவிலியர் படிப்புக்கு ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பொறியியல், செவிலியர் படிப்புக்கு ஜூன் 6 முதல் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 02nd June 2018 09:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவையில் பொறியியல்,  செவிலியர் படிப்புக்கு ஜூன் 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுதொடர்பாக சென்டாக் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவையில் அனைத்து கல்லூரிகளிலும் உள்ள தொழிற்கல்விப் பிரிவுகள், தொழிற்கல்வி அல்லாத  பாடப் பிரிவுகள், ஹோட்டல் மேலாண்மை,  பட்டயப் படிப்புகள், நுண்கலை இரண்டாம் ஆண்டு நேரடிச் சேர்க்கை, பகுதி நேரப் பட்டயப் படிப்புகள் போன்றவற்றுக்கு ஒரே விண்ணப்பம் மூலம்  இணையம் வழியாக (ஆன்லைன்) மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
    இந்தக் கலந்தாய்வை நடத்த சென்டாக் அமைப்புக்கென்று புதிய இணையதளம் (w‌w‌w.​c‌e‌n‌t​a​c‌p‌u‌d‌u​c‌h‌e‌r‌r‌y.‌i‌n) உருவாக்கப்பட்டுள்ளது.  இதன் முதல் கட்டமாக, அந்த இணையதளம் மூலம் கலை, அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். 
    அடுத்த கட்டமாக, கால்நடை மருத்துவம், பி.எஸ்சி., செவிலியர்,  எம்எல்டி,  எம்ஆர்ஐடி,  பொறியியல், பி.பார்ம்., பி.ஏ., எல்.எல்.பி., பி.எஸ்சி., விவசாயம்,  தோட்டக்கலை ஆகிய பாடப் பிரிவுகளுக்கு வருகிற ஜூன் 6-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும்.  இதில் ஆட்சேபனை இருந்தால், திருத்தம் செய்ய ஜூன் 21-ஆம் தேதி மாலை 5 மணி வரை தெரிவிக்கலாம். 
    ஜூன் 22-ஆம் தேதி இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.  இதைத் தொடர்ந்து, முதல் கட்டக் கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதி தொடங்கி நடைபெறும். கலந்தாய்வில் இடம் கிடைத்தவர்கள் ஜூலை 12-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
    இரண்டாம் கட்டக் கலந்தாய்வு ஜூலை 18-ஆம் தேதி தொடங்கும்.  இந்தக் கலந்தாய்வில் இடம் கிடைத்த மாணவர்கள் ஆகஸ்ட் 3 -ஆம் தேதிக்குள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர வேண்டும்  என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai