Enable Javscript for better performance
முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    முன்னாள் படை வீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 02nd June 2018 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முன்னாள் படை  வீரர்களின் வாரிசுகள் கல்வி உதவித் தொகை பெற ஜூன் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று புதுவை முப்படை நலத் துறை அறிவித்துள்ளது. 
    இதுகுறித்து அந்தத் துறையினர் இயக்குநர் அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
    மறுவேலை வாய்ப்பு பெறாத, வருமான வரி செலுத்துவோர் பட்டியலில் இடம் பெறாதவர்களான முன்னாள் ராணுவ வீரர்கள்,  விதவைகள் தங்களது குழந்தைகளின் பள்ளி, கல்லூரிப் படிப்புக்கான நிகழ் கல்வி (2017-18) ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் முப்படை நலத் துறை மூலம் ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூலை 20-ஆம் தேதி வரை அலுவலக நாள்களில் வழங்கப்பட உள்ளது.  எனவே இதற்கு தகுதியுள்ள முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் விதவைகள் தங்களது அடையாள அட்டையுடன் அலுவகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 
    இதுதொடர்பாக காரைக்கால்,  மாஹே, ஏனாம் பகுதிகளைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் விதவைகள் அந்தந்தத் தலைமைக் கல்வித் துறை அதிகாரி அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
    நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை அசல் பள்ளிக் கட்டண ரசீதுகளுடன் முப்படை நலத் துறையில் ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.  
    காலம் கடந்து சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai